பொதுவாக மக்கள் தவறாகவே கருதுவது என்னவென்றால், எழுத்தாளரின் கற்பனைத்திறன் எப்பொழுதும் வேலைசெய்து கொண்டே இருக்கும் என்றும், அவர் தொடர்ந்து எல்லையற்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்வுகளையும் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார் என்றும், அவர் தனது கதைகளை காற்றிலிருந்து வரவழைக்கிறார் என நினைக்கிறார்கள்.
அதற்கு எதிர்மறையானது உண்மையாகும். நீங்கள் ஒரு எழுத்தாளன் என்று மக்களுக்கு தெரிந்துவிட்டால், அவர்களே கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் உங்களுக்கு கொண்டு வருவார்கள்.
நீங்கள் உங்களது ஆற்றலுக்கு ஏற்றவாறு பார்த்து, கவனமாக கேட்டு கொண்டிருந்தால், இந்த கதைகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை தேடி வரும். மற்றவரின் கதைகளை சொல்லி கொண்டிருந்த உங்களுக்கு, நிறைய கதைகள் உங்களுக்கு சொல்லப்படும்.
கதாசிரியரின் ஓரங்கவுரை (கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் திரைப்படம்)